ஜெயலலிதா பெயர்சூட்டிய சிங்கத்திற்கு பிறந்த குட்டிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் சூட்டினார்

சென்னையை அடுத்துள்ள வண்டலூர் வன உயிரியல் பூங்காவில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பெயர் சூட்டிய பெண் சிங்கத்துக்கு பிறந்த குட்டிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் சூட்டினார்.

கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெண் சிங்கக் குட்டிக்கு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஜான்ஸி என பெயரிட்டார். ஜெயலலிதா பெயர் சூட்டிய ஜான்ஸிக்கும், சிவா என்ற ஆண் சிங்கத்துக்கும் கடந்த பிப்ரவரி 5.ம் தேதி ஆண் சிங்கக் குட்டி பிறந்தது.

8 மாத ஆண் சிங்கக் குட்டிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று விஷ்ணு என பெயர் சூட்டினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன