Advertisement

ஜெயலலிதா நினைவிடத்தில் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மரியாதை

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

ஜி.எஸ்.டி. குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக நேற்றிரவு சென்னை வந்த அருண் ஜேட்லி, அடையாறில் நடைபெற்ற தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோருக்கான கருத்தரங்கில் பங்கேற்றார். இதையடுத்து மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்ட மெரினா கடற்கரைக்குச் சென்ற அவர், ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன், தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். இதையடுத்து சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் அருண் ஜேட்லி பங்கேற்றபின், மாலை மீண்டும் டெல்லி செல்கிறார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன