ஜீன்ஸ் ஆடை மூலம் சேலை, சல்வார், லெஹங்கா தயாரித்த ஆடை வடிவமைப்பு கல்லூரி மாணவர்கள்

திருப்பூர் ஆயத்த ஆடை வடிவமைப்பு கல்லூரி மாணவ, மாணவிகள் ஜீன்ஸ் ஆடை மூலம் சேலை, சல்வார், லெஹங்கா மற்றும் காதணி, வளையல், மோதிரம் உள்ளிட்ட பல்வேறு ஆபரணங்களை வடிவமைத்து பார்வையாளர்களை அசத்தினர்.

சர்வதேச அளவில் பின்னலாடை ஏற்றுமதி செய்து வரும் திருப்பூரில், ஆயத்த ஆடை வடிவமைப்பு கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்குள்ள மாணவ மாணவியர், ஜீன்ஸ் ஆடையை பயன்படுத்தி pant, shirt மட்டுமல்லாமல், சேலை, சல்வார், லெஹங்கா மற்றும் காதணி, வளையல், மோதிரம், மணி பர்ஸ் என, பல்வேறு விதமான ஆடைகள் மற்றும் ஆபரணங்களை செய்யமுடியும் என்பதை நிரூபித்துக் காட்டினர். இவை, சர்வதேச அளவில் அதிக வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன