Advertisement
Advertisement

ஜி.எஸ்.டி. வரிக்குறைப்பு ஏழைகளை சென்றடைய வேண்டும் – நிதித்துறை செயலர்

ஜிஎஸ்டி வரிக் குறைப்பின் பலன்கள் ஏழை எளிய மக்களைச் சென்றடைவதை, பெருநிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய நிதித்துறை செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

180க்கும் மேற்பட்ட பொருட்களின் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீத வரம்புக்குள் கொண்டு வரப்பட்டது. உணவகங்களின் மீதான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டது. கடந்த15ஆம் தேதி முதல், வரி குறைப்பு அமலுக்கு வந்த போதும், முந்தைய விலைக்கே வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்வதாக புகார்கள் எழுந்தன. சில உணவகங்கள் வரியைக் குறைத்துவிட்டு உணவுப் பண்டங்களின் விலையை ஏற்றிவிட்டன. இது குறித்து பெருநிறுவனங்களிடம் பேச்சு நடத்திய மத்திய நிதித்துறை செயலாளர் ஹஸ்முக் அதியா, பெருநிறுவனங்கள் தங்கள் பொருட்கள் சில்லரை வியாபாரிகள் மூலமாக பொதுமக்களை அடையும் போது, ஜிஎஸ்டியின் பயன் மக்களை சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். வரி குறைக்கப்பட்ட பொருட்களின் மீது புதிய விலையை தெரிவிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். சில்லரை வியாபாரிகள் விலையைக் குறைக்காமல் இருந்தாலும், பெருநிறுவனங்கள்தான் அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அதியா எச்சரிக்கை விடுத்தார்.

உணவகங்கள் விலையை உயர்த்த வேண்டுமானால் தங்கள் தொழில்தேவைக்கு ஏற்ப அதனை செய்யலாம் என்று கூறிய ஹஸ்முக் அதியா, உணவகத் தொழில் போட்டிகள் நிரம்பியது என்பதால் அனாவசியமாக விலையை உயர்த்த மாட்டார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன