ஜி.எஸ்.டியின் கீழ் பதிவு செய்துகொள்ளும் நிறுவனங்கள் எண்ணிக்கை உயர்வு

ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் கீழ் தங்களைப் பதிவு செய்துகொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை ஒரு கோடியாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு ((VAT)) வாட், ((excise)) எக்சைஸ், சேவை வரி என வெவ்வேறு வரிவிதிப்புகளுக்கு ஒரே நிறுவனம் பதிவு செய்துகொண்டிருந்ததால், அனைத்து வரிகளையும் ஒருங்கிணைத்த ஜி.எஸ்.டியின் கீழ் அந்த நிறுவனங்கள் பதிவு செய்துகொள்ளும்போது, மொத்த எண்ணிக்கை 86 லட்சம் பதிவில் இருந்து 70 லட்சமாகக் குறையும் என முதலில் கணிக்கப்பட்டது. ஆனால், இதுவரை வரிவிதிப்பின் கீழ் வராத சில துறைகள் புதிய ஜி.எஸ்.டி வரி விதிப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

வரி விலக்குகோரி போராட்டம் நடத்தி வரும் ஜவுளி நிறுவனங்கள் கோரிக்கைக்கு மத்திய அரசு செவி சாய்க்காததால் அவர்களும் ஜி.எஸ்.டி யின் கீழ் பதிவு செய்யவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த நிதி ஆண்டின் முடிவில் பதிவு எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால் வரி செலுத்தும் நிறுவனங்களின் சதவீதமும் அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன