ஜிஎஸ்டி வரிவிதிப்பால் புதிய செல்போன்களின் விலை 5 சதவீதம் உயரும்

ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஜூலை முதல் தேதியில் இருந்து அமலுக்கு வர உள்ள நிலையில் செல்போன்கள் விலை உயரும் என்பதுடன் செல்போன் கட்டணங்களும் உயரும்.

புதிய செல்போன் வாங்குவோருக்கு உள்நாட்டு உற்பத்தியின் மீது வரிவிதிப்பு 12 சதவீதமாக உயர்த்தப்படுவதால் அதன் விலை 5 சதவீதம் வரை அதிகரிக்கும். பத்தாயிரம் ரூபாய் கொடுத்து செல்போன் வாங்கினால் 500 ரூபாய் கூடுதலாக கொடுக்க நேரிடும். கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான கட்டத்தில் விற்பனை செய்யப்பட்ட 80 சதவீதம் செல்போன்கள் உள்நாட்டு தயாரிப்புகள்தாம்.சுமார் 6 கோடி செல்போன்கள் இந்த காலகட்டத்தில் விற்கப்பட்டுள்ளன.

இதே போன்று செல்போன் கட்டணத்திலும் ஒவ்வொரு ஆயிரம் ரூபாய்க்கும் கூடுதலாக 30 ரூபாய் தரவேண்டியிருக்கும்.ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 100 ரூபாய் ரீசார்ஜ் செய்யும் போது தற்போது 85 ரூபாய்க்கு டாக் டைம் கிடைக்கிறது. அது இனி 82 ரூபாயாக குறையும்.

102 total views, 1 views today

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன