Advertisement

ஜார்கண்ட் – சந்தேகத்திற்கிடமான வகையில் செயல்பட்ட மாவட்ட நீதிபதிகள் 12 பேர் டிஸ்மிஸ்

ஜார்கண்ட் மாநிலத்தில் சந்தேகதிற்கு இடமான வகையில் செயல்பட்டதாக கூறி மாவட்ட நீதிபதிகள் 12 பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஜார்கண்ட் மாநிலத்தில் குறிப்பிட்ட சில மாவட்ட நீதிபதிகளின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கிடமாக இருந்ததாக நிர்வாக சீர்திருத்தத் துறை செயலாளர் நிதி காரே கூறியுள்ளார். இதையடுத்து அவர்களுக்கு கட்டாய பணி ஓய்வு வழங்கும்படி ராஞ்சி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ராஞ்சி உயர் நீதிமன்ற உத்தரவையடுத்து மாவட்ட நீதிபதிகள் 12 பேருக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பட்டியலில் தலைமை குற்றவியல் நீதிபதி ராம் ஜியாவன் மற்றும் ராம்ஜித் யாதவ் ஆகியோரும் அடங்குவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன