ஜான்சன் அன்டு ஜான்சன் நிறுவனத்துக்கு விதித்த இழப்பீடு ரத்து

புற்றுநோய் ஏற்பட காரணமான முகப் பவுடரை தயாரித்து விற்பனை செய்ததாக ஜான்சன் அன்ட் ஜான்சன் பேபி நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் இழப்பீடு உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவன முகப்பவுடரை 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வந்ததால் கருப்பைப் புற்றுநோய் ஏற்பட்டதாக கூறி வழக்குத் தொடர்ந்த இவா எச்செவெர்ரியா (Eva Echeverria) என்ற பெண்மணிக்கு 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதை கலிஃபோர்னியா நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இரு தரப்பிலும் போதிய ஆதாரம் வழங்கப்படவில்லை எனக் கூறிய கலிஃபோர்னியா நீதிமன்றத்திடம் தங்கள் நிறுவனத்துக்கு இவா என்பவர் அவப்பெயர் ஏற்படுத்திவிட்டதாக ஜான்சன் அன்டு ஜான்சன் தெரிவித்தது.

இதையடுத்து, தனியாக ஒருவழக்கு பதிவு செய்யுமாறு அந்நிறுவனத்திடம் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன