ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை சட்டப்படி எதிர்கொள்ள முடிவு – ஜாக்டோ ஜியோ

ஜாக்டோ ஜியோ போராட்டத்துக்கு எதிரான நீதிமன்ற நடவடிக்கைகளை சட்டப்படி எதிர்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் சென்னையில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் அரசின் அச்சுறுத்தல்களுக்கு பணியாமல், தொடர் வேலை நிறுத்தத்தின் ஒரு கட்டமாக காத்திருப்புப் போராட்டத்தை தொடர முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. செப்.15-ஆம் தேதி ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை அழைப்பாணை விடுத்துள்ளதை ஏற்று நேரில் ஆஜராகி வழக்கை சட்டப்படி எதிர்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன