ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்தியா வருகை

அரசுமுறைப்பயணமாக இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் சின்சோ அபே யை பிரதமர் மோடி அகமதாபாத் விமான நிலையத்தில் வரவேற்றார்.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் திட்டம் மும்பை- அகமதாபாத் இடையே செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டுவிழாவில் பங்கேற்பதற்காக, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்தியா வந்துள்ளார். சின்சோ அபே தனது மனைவி ((Akie Abe)) அகி அபே வுடன் குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் வந்தடைந்தார். இருவரையும் பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் ஜப்பான் பிரதமருக்கு முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ள இந்திய-ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான 12வது ஆண்டு உச்சி மாநாட்டில் சின்சோ அபே பங்கேற்கிறார். அதன்பின்னர், காந்தி நகரில் உள்ள மகாத்மா மந்திருக்கு செல்லும் பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும், இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்திய பின்னர், முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. நாளை காலை சபர்மதி ரயில் நிலையத்தில் நடைபெறும், புல்லட் ரயிலுக்கான அடிக்கல் நாட்டுவிழாவில் பிரதமர் மோடியுடன் பங்கேற்கும் ஷின்சோ அபே, குஜராத் முதலமைச்சர் உடனான விருந்துக்குப் பின்னர் ஜப்பான் புறப்படவுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன