Advertisement
Advertisement

சொந்த வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடிய பாஜக பிரமுகர் கைது

திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காடு அருகே தமது சொந்த வீட்டில் தாமே பெட்ரோல் வெடிகுண்டை வீசி நாடகமாடிய பா.ஜ.க. பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

மேல் அயனப்பாக்கத்தைச் சேர்ந்த பரமானந்தம், திருவள்ளூர் மாவட்ட பாஜக தாழ்த்தப்பட்டோர் அணியின் மாவட்ட தலைவராக உள்ளார். பரமானந்தன் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறப்பட்டது. வெடிச்சத்தத்துடன் ஜன்னல் வழியாக விழுந்த பெட்ரோல் குண்டால் கரும்புகை எழுந்ததோடு, கட்டில் மெத்தை போன்ற பொருட்கள் எரிந்தும் நாசமானது.

மேலும் வீட்டின் வெளியே இருந்த பாஜக கொடிக்கம்பத்தையும் அந்த மர்ம நபர்கள் சேதப்படுத்திவிட்டுச் சென்றதாகவும் சொல்லப்பட்டது. சத்தம் கேட்டு வீட்டிலிருந்து வெளியே வந்ததாகக் கூறி பரமானந்தம், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், விசாரணையில் சொத்துப் பிரச்சனையை திசை திருப்ப தாமே தமது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறியதால், கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன