சொத்துக்குவிப்பு வழக்கு செலவாக ரூ.12.4 கோடி கேட்கும் கர்நாடக அரசு

சொத்துக்குவிப்பு வழக்குக்குச் செலவான 12 கோடி ரூபாயை வழங்குமாறு கர்நாடக அரசு தமிழக அரசிடம் கேட்டுள்ளது. திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை அடுத்து சொத்துக் குவிப்பு வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இருந்து 2003-ம் ஆண்டு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கு நடத்தியதற்காக, கர்நாடகா அரசுக்கு 12 கோடியே 4 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று பில்-லை இணைத்து அம்மாநில அரசு தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. நீதிமன்ற கட்டணம், நீதிபதி, வழக்கறிஞர்கள் ஊதியம், பாதுகாப்புக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் உள்ளிட்டவைகளுக்காக இந்த கட்டணத்தை கர்நாடக அரசு கேட்டுள்ளது. இந்தத் தொகை குற்றவாளிகள் செலுத்தும் அபராதத் தொகையில் இருந்து வழங்கப்படும் என கூறப்படுகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன