சேலம் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் சுமார் 300 பேர் காய்ச்சலுடன் அனுமதி

சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் 20 பேருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் காய்ச்சல் பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சேலம் தலைமை அரசு மருத்துவமனையில் 300க்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களில் 223 பேர் சிறுவர்களும், சிறுமியர்களும் ஆவர். 108 பெரியவர்களும் சேலம் மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர 200க்கும் மேற்பட்டோர் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் பாதிப்புகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி, ஏற்காடு, ஓமலூர் என அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு என தனி பிரிவு தொடங்கப்பட்டு உள்ளது.

களப்பணியாளராக 1800 பேர் நியமனம் செய்யப்பட்டு சுகாதார பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

50 சுகாதார அதிகாரிகள் மற்றும் நடமாடும் மருத்துவல் கண்காணிப்பு குழு மூலம் காய்ச்சல் பாதித்த பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாக சுகாதாரதுறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன