செவிலியரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி SRM மருத்துவமனை செவிலியர்கள் போராட்டம்

சென்னையை அடுத்த பொத்தேரி உள்ள எஸ்.ஆர்.எம். மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர் மீது தாக்குதல் நடத்தியதாக கூறி 500க்கும் மேற்பட்ட சக செவிலியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் பொத்தேரியில் உள்ள எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஊதிய உயர்வு உள்ளிட்ட சலுகைகளை வலியுறுத்தி கடந்த 3 நாட்களாக செவிலியர்கள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

பணியை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களில் ஒருவரான சத்தியா என்பவரை எஸ்.ஆர்.எம் மருத்துவமனை நிர்வாகத்தினர் கடுமையாக தாக்கியதாக புகார் கூறி சக செவிலியர்கள் நுழைவு வாயில் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

செவிலியர் சந்தியா மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரியும், ஊதிய உயர்வு வழங்கக் கோரியும், 500க்கும் மேற்பட்ட செவிலியர்கள் முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன