செல்வந்தர்களுக்கு மட்டுமே வட்டிக்கு பணம் கொடுத்தேன் – போத்ரா

செல்வந்தர்களுக்கு மட்டுமே வட்டிக்கு பணம் கொடுத்ததாகவும், நீதி வெல்லும் என்றும் பைனான்சியர் போத்ரா போலீசுக்கு சவால் விட்டுள்ளார். கந்துவட்டிக்கு பணம் கொடுத்த வழக்கில் கைதாகி குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சினிமா பைனான்சியர் போத்ரா.

அவரது இரு மகன்கள் மீது வைரவியாபாரி ஆனந்த் நாகர் என்பவர் கொடுத்த புகார் குறித்து விசாரிக்க, 4 நாட்கள் போலீஸ் காவல் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. நீதிமன்றத்திற்கு வரும் போதே தனக்கு நீதி கிடைக்கும், போலீஸ்காவல் கிடைக்காது என்று உற்சாகமாக வந்திறங்கினார் பைனான்சியர் போத்ரா

அவர் நினைத்தபடியே காவல்துறையினரின் மனுவை மாஜிஸ்திரேட் தள்ளுபடி செய்தார். முன்னதாக நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போத்ரா, தான் ஒன்றும் ஏழை மக்களிடம் கந்து வட்டி வசூலிக்கவில்லை என்றும் முறையான ஆவணங்களின் அடிப்படையில் செல்வந்தர்களுக்கு பணம் கொடுத்து வட்டி வசூலித்ததாக தெரிவித்தார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு போத்ராவை நீதிமன்றத்திற்கு போலீஸ் வாகனத்தில் அழைத்து வந்த போது, யாரும் அவரை அடிக்காத நிலையில் போலீசார் தன்னை அடிப்பதாக ஆக்சன் காட்டிய போத்ரா தற்போது உற்சாகமாக காணப்பட்டார்

மேலும் 105 பேரிடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு ஏமாற்றியவர்களை எல்லாம் குண்டர் சட்டத்தில் போடாமல் 4 பேருக்கு வட்டிக்கு பணம் கொடுத்த தன்னை குண்டர் சட்டத்தில் போட்டுட்டாங்க என்று போலீசாரை போத்ரா சாடினார்.

வழக்கமாக தன்னை ஒரு நோயாளி போல காட்டிக்கொள்ளும் போத்ராவின் இந்த திடீர் மாற்றம் காவல்துறையினருக்கு வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன