செல்போன் கடை திறப்பு விழாவில் நடிகை தமன்னா பங்கேற்பு – ஆயிரக்கணக்கில் திரண்ட ரசிகர்களால் போக்குவரத்து பாதிப்பு

சேலத்தில் செல்போன் கடை திறப்பு விழாவில் கலந்து கொண்ட நடிகை தமன்னாவை காணத்திரண்ட ரசிகர்களால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சேலம் நான்கு ரோடு பகுதியில் தி சென்னை மொபைல்ஸ் கடை திறப்பு விழாவில் நடிகை தமன்னா கலந்து கொள்வார் என விளம்பரம் செய்யப்பட்டது.

இதனையடுத்து அங்கு காலை முதலே ரசிகர்கள் திரண்டனர். நேரம் செல்லச் செல்ல ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியதால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

காலை 11 மணியளவில் செல்போன் கடைக்கு வருகை தந்த நடிகை தமன்னா, ரிப்பன் வெட்டி கடையைத் திறந்து வைத்தார். பின்னர் கடைக்கு வெளியே வந்த தமன்னாவும், டிவி தொகுப்பாளினி ஜாக்குலினும் ரசிகர்கள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் ரசிகர்களின் செல்போன்களை வாங்கிய தமன்னா சில செல்ஃபிகளை எடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.

நடிகை தமன்னாவை பார்த்த உற்சாகத்தில் சாலையில் திரண்ட ரசிகர்கள், தமன்னாவின் கார் வெளியேற முடியாதவாறு சூழ்ந்து கொண்டனர். இதையடுத்து அங்கு சென்ற பாதுகாவலர்கள் மற்றும் போலீசார் நீண்ட தள்ளுமுள்ளுவுக்கிடையே தமன்னாவை ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து மீட்டு அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

தமன்னா வருகையால் அப்பகுதியில் சுமார் இரண்டு நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு மருத்துவமனைக்கு சென்ற 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் நெரிசலில் சிக்கிக் கொண்டதோடு, ஏராளமான வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமமடைந்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன