செய்தி அரங்கில் கூச்சலிடும் செய்தித்தொகுப்பாளர்

MSNBC என்ற ஆங்கில செய்தி தொலைக்காட்சியின் செய்திவாசிப்பாளர், உணர்ச்சி வசப்பட்டு ஆபாச வார்த்தைகளில் பேசி கூச்சலிடும் காட்சிகள் வைரலாக பரவி வருகின்றன.

MSNBC செய்தி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வரும் பிரபல தொகுப்பாளரான Lawrence O’Donnell, திடீரென கோபத்தின் உச்சிக்கே சென்று கூச்சலிட்டும், அருகில் வரும் பணியாளரை விலகிச் செல்லுமாறு கையை உதறித் தள்ளிவிட்டும் ஆத்திரத்தை வெளிப்படுத்தும் காட்சிகள் இதில் இடம்பெற்றுள்ளன. கட்டுப்பாட்டு அறை கட்டுப்பாட்டை இழந்து விட்டதாகவும், உள்ளே யாரோ அடிக்கப்படும் சப்தம் கேட்பதாகவும் கூச்சலிட்டு, இடையிடையே ஆபாச வார்த்தைகளையும் கூறி லாரன்ஸ் ஓ டோனல் வசைமாறி பொழியும் 8 நமிடக் காட்சி வைரலாக பரவி வருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன