செய்தியாளர் சந்திப்பில் கொந்தளித்த டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், செய்தியாளர் சந்திப்பின் போது ஊடகம் முதல் நீதிமன்றம் வரை அனைத்தையும் கடுமையாக விமர்சித்தார். அதிபராக பதவியேற்று 4 வாரங்கள் ஆகியுள்ள நிலையில், தம் மீதான குற்றச்சாட்டுகள், புகார்கள் குறித்து விளக்கமளிப்பதற்காக செய்தியாளர்கள் சந்திப்புக்கு அவர் ஏற்பாடு செய்திருந்தார். ஒரு மணிநேரம் 15 நிமிடங்கள் பேசிய டொனால்ட் டிரம்ப், எடுத்தவுடன் ஊடகங்களை கடுமையாக சாடினார். ஊடகவியலாளர்களை நேர்மையற்றவர்கள் என்று கூறிய அவர், ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் அனைத்தும் பொய்யானதாகவே இருப்பதாக கூறினார். நம்பமுடியாத அளவு வளர்ச்சியை தமது தலைமையிலான அரசு கொடுத்திருப்பதாக கூறிய டிரம்ப், நன்கு சீர் செய்யப்பட்ட எந்திரம் போல் ஆட்சி நடைபெறுவதாக தெரிவித்தார். தடை உத்தரவு குறித்து பேசுகையில், மோசமான நீதிமன்றங்களை நாடு பெற்றிருப்பதாக டிரம்ப் சாடினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன