செயலிழந்து நடுவழியில் நின்ற ரோப் கார்கள்

ஜெர்மனியில் ஆற்றின் மீது இயக்கப்படும் ரோப் கார்கள் நடுவழியில் நின்றதால், அந்தரத்தில் தவித்த நூற்றுக்கும் மேற்பட்டோர் பத்திரமாக மீட்கப்பட்டனர். Cologne நகரில் Rhine ஆற்றைக் கடக்கும் வகையில் பிரம்மாண்டமான முறையில் ரோப் கார்கள் இயக்கப்படுகின்றன.

இவற்றில் 32 ரோப் கார்கள் ஒரே நேரத்தில் செயலிழந்து நடுவழியில் நின்றன. இதனால் குழந்தைகளுடன் பயணித்த நூற்றுக்கும் மேற்பட்டோர், அந்தரத்தில் சிக்கித் தவித்தனர். தகவறிந்ததும் மீட்புப் பணியில் குதித்த தீயணைப்புத்துறையினர், துரிதமாக செயல்பட்டனர். ராட்சத ஏணிகள், மீட்புப்படகுகள் கொண்டு பயணிகளை பத்திரமாக மீட்டனர். ரோப்கார்கள் செயலிழந்ததற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன