செம்மரம் கடத்தி சென்றவர்கள் கார் மின்கம்பத்தில் மீது விபத்து

ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா அருகே செம்மரம் கடத்தி சென்றவர்களின் கார் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதனை அடுத்து காரில் இருந்தவர்கள் உயிருக்கு பயந்து அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தனர்.

இந்நிலையில் கார் பலமாக மோதியதால் அந்த மின்கம்பம் சரிந்ததை அடுத்து உடனடியாக அதில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த ரேணிகுண்டா போலீசார் காரை சோதனை செய்து பார்த்ததில் காரில் இருந்து 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 செம்மரங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன