செம்மரம் கடத்தியதாக திருவண்ணாமலையை சேர்ந்த 2 பேர் கைது

ஆந்திராவில் செம்மரம் கடத்தியதாக திருவண்ணாமலையை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சித்தூர் மாவட்டத்தில் உள்ள பெனுகொண்டா வனப்பகுதியில் ரோந்து சென்ற போது, இருவரும் செம்மரங்களை வெட்டி கடத்தியதாக பாக்ராப்பேட்டை போலீசார் தெரிவித்தார். இதையடுத்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அன்பழகன், சிவக்குமார் என்பது தெரிய வந்தாக போலீசார் கூறியுள்ளனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!