Advertisement

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரண்டாவது நாளாக விடிய விடிய மழை

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இரண்டாவது நாளாக விடிய விடிய மழை பெய்துள்ளது. சென்னையில் கடந்த 3 நாட்களாக பலத்த காற்றுடன் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம், மாலையில் தொடங்கிய மழை, இரவிலும் மழை நீடித்தது.

நேற்று பகல் முழுவதும் சென்னையில் மேகமூட்டமாகவும், அவ்வப்போது லேசான தூறலும் இருந்து வந்தது. அவ்வப்போது பலத்த மழையும் பெய்தது. இரவு முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்தவாறு இருந்ததால், அதிகாலையில் வேலைக்கு சென்றவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை, ஸ்ரீபெரும்புதூர், சுங்குவார்சத்திரம் ஆகிய இடங்களில் அதிகாலையில் பலத்த மழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் இரவிலும், அதிகாலையிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

இதனிடையே, அண்ணாநகர் பகுதியில் நேற்று மாலை, பெரிய மரம் ஒன்று சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் உடனடியாக மரக் கிளைகளை வெட்டி போக்குவரத்தை சீர்செய்தனர். துணை ஆணையர் சுதாகர் அங்கிருந்த போலீசாருடன் இணைந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன