சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை

வெப்பச்சலனம் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மழை பெய்யக் கூடுமென சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. தமிழகத்தில் திட்டக்குடி, கும்பகோணம், கடலூர், சீர்காழி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளிலும் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக மழை பெய்தது. சில இடங்களில் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்தது.

இந்நிலையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வெப்பச் சலனம் காரணமாக இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன