Advertisement
Advertisement

சென்னை – பப்பில் மது அருந்தும் பெண்களில் 60 சதவீதம் பேருக்கு கல்லீரல் பாதிப்பு

சென்னையில் பப்பில் மது அருந்தும் பெண்களில் 60 சதவீதம் பேர் கல்லீரல் பாதிப்புக்குள்ளாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது

கையில் மது பாட்டில்…. விடியும் வரை ஆட்டம்… சென்னையில் பெரும்பாலான பப்களில் ஆண்களுக்கு இணையாக இளம் பெண்களும் மது அருந்துவது வழக்கமாகி வரும் மேற்கத்திய கலாச்சாரம்..!

தகவல் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப சென்னையில் வார இறுதி நாட்களை மகிழ்விக்கும் பப்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது..! அங்கு வாரம் ஒரு முறைதானே என்று மது அருந்தும் பெண்கள் பலரை நாம் பார்த்திருக்கலாம். அவர்களில் 60 சதவீதம் பேருக்கு கல்லீரல் பாதிப்படைந்து அவதிப்பட்டு வருகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா ? நம்பித்தான் ஆகவேண்டும்..!

ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு கல்லீரல் மென்மையானது என்பதால், ஆல்கஹாலால் வெகு விரைவாக கல்லீரல் பாதிக்கப்படுவதாகவும், கல்லீரலில் உள்ள செல்கள் முழுவதுமாக இறந்து கல்லீரல் செயல் இழந்துவிடும் என்று எச்சரிக்கிறார் அப்பல்லோ மருத்துவமனையின் கல்லீரல் சிறப்பு சிகிச்சை நிபுணர் ஜாய் வர்க்கீஸ்

கடந்த ஒருவருட காலத்தில் மட்டும் அப்பல்லோவில் 800 பேருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்களில் 60 சதவீதம் பேர் பப்புக்கு சென்று மது அருந்தும் பெண்கள் என்பது தான் அதிர்ச்சியான தகவல். மற்ற படி வீடுகளில் வைத்தும் நண்பர்கள் வற்புறுத்தலின் பேரிலும் மது அருந்த கற்றுக்கொண்டவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறார் ஜாய் வர்க்கீஸ்

பொதுவாக உடலில் கல்லீரல் பாதிக்கப்பட்டால் அது கணையத்தையும் அதனை தொடர்ந்து இதயத்தையும் தாக்கி மாரடைப்பு ஏற்பட வழிவகுத்துவிடும் என்று ஏச்சரிக்கும் மருத்துவர்கள், ஆல்கஹாலை முற்றிலும் கைவிடுவது ஒன்றுதான் கல்லீரலை பாதுகாக்கும் என்கின்றனர். குறிப்பாக கிராமப்புறபெண்கள் எவருக்கும் கல்லீரல் பாதிப்பு தொடர்பான சிகிச்சைக்கு வருவதில்லை என்றும் சுட்டிக்காட்டுகிறார் ஜாய் வர்க்கீஸ்

எனவே ஒரு நாள் தானே என்று விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிபோல தீயபழக்கங்களில் விழுந்துவிடாமல்…. நல்ல பழக்க வழக்கங்களுடன் சத்தான உணவு வகைகளை எடுத்துகொண்டால் உயிர் காத்து.. உடலை பேணலாம் ..!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன