சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குப்பைகள், தேங்கி கிடக்கும் பழைய டயர்கள்

டெங்கு ஒழிப்பு நடவடிக்கையில் அரசு உயர் அதிகாரிகள், உண்மையாகவே ஈடுபடுகிறார்களா? அல்லது சாம்பிரதாய நிகழ்வுகளோடு முடித்துவிடுகிறார்களா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

டெங்கு விழிப்புணர்வு தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் இவ்வாறு கூறியிருக்கிறார்… ஆனால், இவரது அறிவுரை யாருக்கு என்பதில் தான் சந்தேகம் எழத் தொடங்கியிருக்கிறது.. எங்கிருந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு தொடங்க வேண்டுமோ, எதை பற்றி சென்னை ஆட்சியர் பேசினாரோ, அவரது அலுவலக வளாகத்தில் தான் டெங்கு கொசுக்கள் உற்பத்தியாவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நீக்கமற நிறைந்திருக்கின்றன

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், பழைய டயர்கள், துருப்பிடித்த நிலையில் உள்ள பழைய வாகனங்கள், குப்பைக்கழிவுகள் உள்ளிட்டவை கொட்டிக்கிடக்கின்றன…. மேற்கண்டவற்றை வீடுகளிலோ, அலுவலகங்களிலோ வைத்திருந்தால், 2 ஆயிரம் ரூபாய் அபாரதம் விதிப்போம் என்று கூறி, டெங்கு தடுப்பு பணியை வேகவேகமாக முன்னெடுத்திருக்கும் சென்னை பெருநகர மாநகராட்சி, சென்னை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காணப்படும் இந்த காட்சிகளுக்காக, யாருக்கு அபராதம் விதிக்கப் போகிறது….? என்பதே சாமானியர்களின் கேள்வியாகும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன