சென்னையில் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பல் கைது

சென்னையில் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி பயணிகளிடம் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த 4 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.

ரயில், பேருந்து பயணிகளிடம், சக பயணிகள் போல் பழகியும், கூட்ட நெரிசலைப் பயன்படுத்தியும் தொடர்ந்து செல்போன்கள் திருடப்பட்டன. இந்த நிலையில், மண்ணடி லிங்கிசெட்டி தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள் இருவரும் கேரளாவைச் சேர்ந்த சியாத் முகமது மற்றும் அஷ்ரப் என்பதும், பயணிகளிடம் திருடப்படும் செல்போன்களை விற்றுக் கொடுப்பவர்கள் என்பதும் தெரிய வந்தது.

அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் செல்போனை திருடி அவர்களிடம் விற்பனை செய்து வந்த கடலூரைச் சேர்ந்த முகமது ரபீக் மற்றும் ராம்குமார் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 30 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன