சென்னையில் இளைஞரிடம் ரூ.10 கோடி மதிப்புள்ள கோகைன் பறிமுதல்

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நேற்றிரவு பிடிபட்ட இளைஞரிடம் இருந்து 10 கோடி ரூபாய் மதிப்புள்ள கோகைன் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்ட தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ரயிலில், போதைப் பொருட்களுடன் டெல்லி செல்வதற்கு தயாராக இருந்த விஷால் என்ற இளைஞர் நேற்றிரவு கைது செய்யப்பட்டார். அவரிடம் 3 கிலோ 100 கிராம் எடையுள்ள கோகைன் போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

போதைப் பொருளுடன் பிடிபட்ட விஷால் என்ற இளைஞருக்கு வெளிநாட்டு போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பு இருக்கக் கூடும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். இதனால், சென்னையில் யாருடனெல்லாம் அவருக்கு தொடர்பு இருக்கிறது என்பது குறித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன