சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி முற்றிலும் வறண்டது

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரி 13 ஆண்டுகளுக்கு பிறகு முற்றிலும் வறண்டுள்ளது.

பருவமழை பெய்யாததாலும், ஆந்திர அரசு கிருஷ்ணா நிதிநீரை இந்த ஆண்டு, போதிய அளவு வழங்காததாலும், மூவாயிரத்து 300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரி தண்ணீரின்றி வற்றி காணப்படுகிறது. புழல் ஏரியில் திரும்பிய பக்கம் எல்லாம் தரை வெடிப்பு காணப்படுகிறது.

மேலும் ஏரி வறண்டதால் ஆடு, மாடு போன் கால்நடைகள் அங்கு மேய்ந்து கொண்டிருக்கின்றன. புழல் ஏரி தவிர்த்து, சென்னைக்கு தண்ணீர் வழங்கும் சோழவரம், பூண்டி, செம்பரம்பாக்கம் ஆகிய ஏரிகளிலும் குறைந்த அளவே தண்ணீர் இருக்கிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!