செங்கல்பட்டு, ஓடும் லாரியில் திடீரென தீ

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே ஓடும் லாரியில் திடீரென தீப்பற்றியதில், லாரி முற்றிலும் எரிந்து நாசமானது. புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்ற லாரி காஞ்சிபுரம் மகேந்திராசிட்டி அருகே வந்தபோது முன்பக்கத்தில் இருந்து திடீரென புகை வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுனர் சுப்பிரமணி லாரியில் இருந்து இறங்கி ஓடினார். சிறிது நேரத்தில் எஞ்சினில் பற்றிய தீ லாரி முழுவதும் பரவியது.

மளமளவென பரவிய தீயால், அப்பகுதி முழுவதும் கரும்புகை எழுந்ததால், போக்குவரத்து பாதிப்படைந்தது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்ததையடுத்து போக்குவரத்து சீரானது. விபத்தில் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன