செக் மோசடி வழக்கிலும் விஜய் மல்லையாவை குற்றவாளி என அறிவிக்கக் கோரிக்கை

செக் மோசடி வழக்கிலும் விஜய் மல்லையாவை குற்றவாளி என அறிவிக்கக் கோரி இந்திய விமான நிலையங்கள் ஆணையம் நீதிமன்றத்திடம் வலியுறுத்தியுள்ளது.

வங்கிகளிடம் கடன் பெற்றுக் கொண்டு லண்டனில் இருக்கும் கிங் ஃபிஸர் ஏர்லைன்ஸ் நிறுவனர் விஜய் மல்லையா இந்திய விமான நிலைய ஆணையத்துக்கு வழங்கிய 100 கோடி ரூபாய்க்கான 2 காசோலைகள், வங்கியில் பணமில்லாமல் திரும்பி வந்துவிட்டதாகக் கூறி டெல்லியில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

விமானம் தரையிறங்குவது, விமானத்துக்கான பார்க்கிங் மற்றும் வழிகாட்டி தகவல்கள் பெறுவது உள்ளிட்டவற்றுக்காக பெறப்பட்ட காசோலை என்றும் விமான நிலைய ஆணையம் விளக்கமளித்துள்ளது. ஏற்கெனவே பண மோசடித் தடுப்புச் சட்டத்தின் கீழ் மல்லையாவைக் குற்றவாளி என அறிவித்திருந்தாலும் இந்த வழக்கிலும் அவரைக் குற்றவாளி என அறிவிக்குமாறு ஆணையம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. விசாரணை பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன