சூறைக் காற்றுடன் பெய்த மழையால் வாழை மரங்கள் சேதம்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனை அருகே, பலத்த காற்றுடன் பெய்த மழையால் நூற்றுக்கணக்கான வாழை மரங்கள் சேதமாகின.

சிவகங்கை, சிலைமான், திருப்புவனை உள்ளிட்ட பகுதிகளில் கடும் சூறைக்காற்றுடன் நேற்று கனமழை பெய்தது. சூறைக்காற்றின் தாக்கத்தால் அப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் அடியோடு சாய்ந்து நாசமடைந்துள்ளன.

இதனால், லட்சக்கணக்கான ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன