Advertisement
Advertisement

சுஷ்மிதா சென் தற்காப்புக் கலை பயிலும் வீடியோ காட்சிகள்

முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென் தற்காப்புக் கலை பயிலும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

நவம்பர் 19-ம் தேதியுடன் 42 வயதை எட்டிய சுஷ்மிதா சென் இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பிரபஞ்ச அழகி ஆவார். தமிழில் முதல்வன், ரட்சகன் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், திருமணம் செய்யாமலேயே 2 பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில், தமது 42-வது பிறந்தநாளுக்கு தமக்குத் தாமே அளித்துக் கொண்ட பரிசு என Nunchaku தற்காப்புக் கலையை சுட்டிக்காட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம் என்பதை உணர்ந்த அவர் Nunchaku தற்காப்புக் கலை தொழில்முறை வீரரை போல ஆக்ரோஷமாக செய்யும் காட்சிகள் வியப்பூட்டுகின்றன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன