சுவர் ஓவியங்களால் கிராமத்தை வளப்படுத்த புதிய முயற்சி

பல்கேரியாவில் வறண்ட கிராமம் ஒன்றை சுற்றுலாத் தலமாக்கும் முயற்சியில் போலந்தைச் சேர்ந்த சுவரோவிய கலைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஐரோப்பாவின் தென்கிழக்கே உள்ள அந்நாட்டில், கருங்கடலை ஒட்டி ஸ்டாரோ ஜெலஜேர் ((STARO ZHELEZARE)) ஏழ்மையான கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை பிறர் கவனத்தை ஈர்க்கச்செய்யும் வகையில், அங்குள்ள வீடுகள், கட்டிடங்களின் சுவர்களில் ஓவியங்களை வரைந்து தள்ள உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் முடிவு செய்து, போலந்து கலைஞர்களை வரவழைத்துள்ளார்.

பெண் கலைஞர்களான அவர்கள், மிகவும் உற்சாகத்தோடு உலக அரசியலையும், அரசியல் தலைவர்களையும் விமர்சித்தும், கிண்டல் செய்தும் பல்வேறு ஓவியங்களை சுவர்களில் தீட்டி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன