Advertisement
Advertisement

சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த மலைரயில் காட்சிப் பொருளாக மாறி வரும் சூழ்நிலை

நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் மனம் கவர்ந்த மலைரயில் இனி காட்சிப் பொருளாக மாறி வரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை வரை மலை ரயில்களை இயக்க பயன்படும் மொத்தமுள்ள 12 நீராவி எஞ்சினில் இழுவை சக்தி குறைவு காரணமாக தற்போது 6 எஞ்சின்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன.

இந்நிலையில் இனி இயக்க இயலாத எஞ்சின்களை சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி கோவை இரயில் நிலையம் முன்பும், உதகை இரயில் நிலையம் அருகேயும் வைக்கப்பட உள்ளது. இதற்கிடையில் தற்போது குன்னூர் இரயில் நிலையம் அருகிலேயும் காங்கிரீட் மேடை அமைத்து அதில் எஞ்சின் நிறுத்தும் பணி இரவு முழுவதும் நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன