சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து சிறுவன் உயிரிழப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து 3 வயது சிறுவன் உயிரிழந்தான்.

காரைக்குடி அருகே அழகாபுரியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரது மகனான கார்த்திக், வீட்டின் சுற்றுச்சுவர் அருகே விளையாடிக் கொண்டிருந்தார்.

மழை காரணமாக சுற்றுச்சுவர் ஈரமாக இருந்ததால், சுவர் இடிந்து சிறுவன் மீது விழுந்தது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த சிறுவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!