சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணித் திருவிழா இன்று தொடங்கியது. அதிகாலை ஒரு மணிக்கு நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனையும், இரண்டு மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின், ஆவணித் திருவிழா கொடியேற்றப்பட்டது.

வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!