சுதந்திர தின விழாவை முன்னிட்டு தீவிர சோதனை நடவடிக்கைகள்

சுதந்திர தினத்தையொட்டி, காரைக்காலில் பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அங்குள்ள விடுதிகளில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். கடலோர காவல் நிலைய போலீசார் கடல் வழியே தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்கும் பொருட்டு ரோந்து படகு மூலம் கடலில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

காரைக்கால் மாவட்ட எல்லை பகுதிகளில் கடலில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள படகுகளில் சோதனை மேற்கொண்ட போலீசார்,கடலில் முன்பின் தெரியாத நபர்கள் படகுகளில் நடமாட்டம் காணப்பட்டால் உடனடியாக தகவல் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன