சுதந்திர தினம் குறித்த மத்திய அரசின் வழிகாட்டல் தேவையில்லை – மம்தா

பள்ளிகளில் சுதந்திர தினக் கொண்டாட்டம் தொடர்பாக மத்திய அரசின் வழிகாட்டலை பின்பற்றப் போவதில்லை என்று மேற்குவங்க அரசு அறிவித்துள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமான முடிவு என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்துள்ளார். சுதந்திரதினத்தன்று உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்க ஓவியப்போட்டி, புதிர்ப்போட்டி போன்றவற்றையும் மேல்நிலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு புதிய இந்தியா பற்றிய கலந்துரையாடலையும் நடத்த மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

ஆனால் இதனை மேற்குவங்க அரசு புறக்கணித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாவடகர் மாணவர்களுக்கு சுதந்திரத்தின் வரலாற்றை அறிய வைக்க பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தி வருவதாக தெரிவித்தார். இது எந்த ஒரு கட்சியின் கருத்தியலின் திட்டமல்ல, நாட்டுக்காக உழைத்தவர்களுக்கான திட்டம். இதனை கட்டாயமாக்கவில்லை என்றும் அவர் விளக்கினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன