Advertisement

சுதந்திர தினத்தை முன்னிட்டு ராணுவ ஆயுதங்களின் கண்காட்சி

சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராஜஸ்தானில் நடைபெற்ற ராணுவ கண்காட்சியை திரளானோர் பார்வையிட்டனர். ஜெய்ப்பூரில் நடத்தப்பட்ட இந்த கண்காட்சிக்கு, உங்கள் ராணுவத்தை தெரிந்து கொள்ளுங்கள் என்று தலைப்பிடப் பட்டிருந்தது.

இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் பீரங்கிகள், பல்வேறு வகையான துப்பாக்கிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. விதவிதமான துப்பாக்கிகளை கையாளும்விதம் குறித்து பார்வையாளர்களுக்கு ராணுவ வீரர்கள் விளக்கினர்.

அவற்றை ஆர்வத்துடன் ரசித்த மக்கள், கைகளில் பிடித்துப் பார்த்ததோடு, புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர். இளைஞர்கள் ராணுவத்தில் சேர்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன