சுதந்திர தினத்தை ஒட்டி காவல்துறையினரின் இறுதி கட்ட அணி வகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நிறைவு

சுதந்திர தினத்தை ஒட்டி சென்னையில் காவல்துறையினர் இறுதி கட்ட அணி வகுப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். வரும் 15ஆம் தேதி நாட்டின் 71-வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சென்னை கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மூவர்ண கொடியை ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பை ஏற்றுக் கொள்வார்.

இதற்கான ஒத்திகை நிகழ்ச்சி, 8 மற்றும் 10ஆகிய தேதிகளில் நடைபெற்ற நிலையில், இன்று இறுதி கட்ட ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குதிரைப்படை, கமாண்டோ படையினர்,அதி விரைவுப் படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதை தொடர்ந்து குதிரைப்படை அணிவகுப்பு நடைபெற்றது. திறந்தவெளி வாகனத்தில் முதலமைச்சர் வரும் போது மரியாதை செலுத்துவது, அதிகாரிகள் அவரை வரவேற்பது குறித்தும் ஒத்திகை செய்து பார்க்கப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன