சுதந்திர தினத்தையொட்டி கோவை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணி தீவிரம்

சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை விமான நிலையத்தில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் 71 வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் கோவை விமான நிலையத்தில் ரோந்து மற்றும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய வளாகம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

விமான நிலையத்தின் உள் மற்றும் வெளிப்புற பகுதி முழுவதும் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வளாகத்திற்குள் வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்குப் பிறகே அனுமதிக்கப்படுகின்றன. பயணிகள் அனைவரும் தீவிர தணிக்கைக்கு பின்னரே விமான நிலையத்திற்குள் செல்கின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன