சுட்டுக் கொல்லபட்ட ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் குடும்பத்தினர் தற்காலிக முகாம்களில் தங்க வைப்பு

ஈராக்கின் மொசூலில் இருந்த ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாதிகளின் குடும்பத்தினரை என்ன செய்வது என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

ஈராக்கின் மொசூலை ஆக்கிரமித்திருந்த ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளை ராணுவப் படையினர் சுட்டுக் கொன்றனர்.

அவர்களில் சிலர் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.போர் காரணமாக மொசூலில் இருந்து வெளியேற்றப்பட்ட குடிமக்கள் மீண்டும் தங்களது இடிந்து வீடுகளை சீரமைத்து அங்கு வாழ்வைத் தொடங்கி வருகின்றனர்.

இந்நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளின் தாய், தந்தை, மனைவி, குழந்தைகள் ஆகியோர் தாங்கள் பழிவாங்கப்படக் கூடும் என்ற அச்சத்தில் உள்ளனர்.

தற்காலிகமாக மொசூலில் முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

error: Content is protected !!