சுகோய் போர் விமானத்தில் ஏவப்பட்டு பிரம்மோஸ் ஏவுகணை சோதனை

இந்தியாவின் அதிநவீன ஏவுகணையான பிரம்மோஸ், சுகோய் போர் விமானத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. ஒலியின் வேகத்தை விட அதிவேகமாகச் செல்லும் பிரம்மோஸ் ஏவுகணை பல்வேறு நிலைகளில் சோதனை செய்யப்பட்டுள்ளது.

தரையிலிருந்து விமானத்தைத் தாக்கும் வல்லமையும், கடலிலிருந்து தரையைத் தாக்கும் திறனும் ஏற்கனவே பரிசோதிக்கப்பட்டுள்ளது தற்போது அதி நவீன போர் விமானமான சுகோய் விமானம் மூலம் தரையில் உள்ள இலக்குகளை தாக்கும் சோதனை செய்யப்ட்டது.

அப்போது 3 ஆயிரத்து 200 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கினை பிரம்மோஸ் ஏவுகணை துல்லியமாக தாக்கியதாக விமானப்படைத் தெரிவித்துள்ளது. ஆனால் இந்தச் சோதனை எங்கு நடத்தப்பட்டது என்று குறிப்பிடப்படவில்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன