சுகாதார சீர்கேடால் காய்ச்சல் பரவும் அபாயம்

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் சுகாதார சீர்கேடால் காய்ச்சல் பரவுவதாக அச்சம் தெரிவித்த பொதுமக்கள் சுகாதார நடவடிக்கை தேவை என கோரிக்கை விடுத்துள்ளனர்.ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே S.கொடிக்குளம் பேரூராட்சி பகுதிகளில் சாக்கடை நீர் தேங்குவதாகவும் குடிநீரில் சாக்கடை மற்றும் கழிவு நீர் கலப்பதால் கடந்த 1 வாரகாலமாக காய்ச்சலால் அவதியடைந்து வரும் பொது மக்கள் கைகால் வீக்கத்துடன் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் வேதனை தெரிவிக்கும் மக்கள், சுகாதார துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன