சீனா – உயரமான கட்டிடங்களில் படிகளில் ஏறும் கலகலப்பான போட்டி

சீனாவில், உயரமான கட்டிடங்களின் படிகளில் ஏறும் கலகலப்பான போட்டி நடைபெற்றது. ஷாங்காய் நகரில் உள்ள 82 மாடி கட்டிடம் ஒன்றில் நடந்த இப்போட்டியில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ஆயிரத்து 700 பேர் பங்கேற்றனர்.

போட்டி தொடங்கியதும், ஆயிரத்து 460 படிகளை ஏறி கடந்து கட்டிடத்தின் உச்சிக்கு செல்ல போட்டியாளர்கள் தீவிரம் காட்டினர்.

ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த 2 பிரிவுகளிலும் ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த போட்டியாளர்கள் முதலிடத்தைப் பிடித்து சாம்பியன் பட்டம் வென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன