சீனாவில் வால்மார்ட் நிறுவன கடைக்குள் நடந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழப்பு

சீனாவில் வால்மார்ட் நிறுவன கடையில் இறைச்சி வெட்டும் கத்தியால் வெட்டி இருவர் கொல்லப்பட்டுள்ளனர்.

சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள சென்ஷென் நகரின் பாவோ பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.

வால்மார்ட் கடைக்குள் புகுந்த 30 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவர் இறைச்சி வெட்டும் கத்தியால் கண்ணில் பட்டவர்களை சரமாரியாக தாக்கினார்.

இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.

9 பேர் காயமடைந்துள்ளனர். தாக்குதல் நடத்திவிட்டு தப்பியோட முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அவரிடம் தாக்குதலுக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன