சீனாவில் மிகப்பெரிய மணல் சிற்பப் பூங்கா

சீனாவின் ஷாங்ஷி மாகாணத்தில் மணற்சிற்பக் கலைஞர்கள் ஒன்று சேர்ந்து மிகப்பெரிய மணல் சிற்பப் பூங்கா ஒன்றை அமைத்துள்ளனர்.

20 ஆயிரம் சதுர மீட்டரில் அமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவில் தற்போது 70 மணல் சிற்பங்கள் காட்சிக்கு உள்ளன. சீனாவில் உள்ள மிகப்பெரிய (Mu Us Desert) மூ உஸ் பாலைவனத்தில் இந்த மணற்சிற்பப் பூங்கா அமைந்துள்ளது. இங்குள்ள மணலின் தன்மை மணற்சிற்பம் செய்வதற்கு மிகவும் ஏதுவாக இருப்பதாக சிற்பக் கலைஞர்கள் கருதுகின்றனர். பார்வையாளர்கள் மணற்சிற்பம் உருவாகும்போதே பார்க்க அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன