சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஹெலிகாப்டர் கண்காட்சி

சீனாவில் நடைபெற்ற சர்வதேச ஹெலிகாப்டர் கண்காட்சி கடைசி நாளில் பொதுமக்கள் பார்வைக்குத் திறந்துவிடப்பட்டது.

நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த கண்காட்சியில் 22 நாடுகளைச் சேர்ந்த 98 ஹெலிகாப்டர்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில் ஹெவி லிஃப்ட் ஹெலிகாப்டர் தீயணைப்புப் பணியை மேற்கொள்ளும் செய்முறை பார்வையாளர்களுக்கு செய்துகாட்டப்பட்டது. வெவ்வேறு விதமான ஹெலிகாப்டர்கள் வானில் வட்டமிட்டும், குட்டிக்கரணம் அடித்தும், வண்ணப்பொடிகளைத் தூவியும் விதவிதமான சாகசங்களை நிகழ்த்திக்காட்டின.

இதனை மைதானத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் குழந்தைகளும் கண்டு ரசித்தனர். தங்கள் செல்ஃபோனிலும் படம் பிடித்துக்கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *