சீனாவில் காற்று மாசுபாட்டை குறைப்பதில் 24 நகரங்கள் தோல்வி

சீனாவில் காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான இலக்கில் 28 நகரங்களில் நான்கு நகரங்களே முன்னேற்றம் கண்டுள்ளன. அதிகரித்து வரும் வாகனங்கள், தொழிற்சாலைகளால் அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் காற்று மாசுபாடு உச்சத்தை அடைந்தது.

பொதுமக்கள் வெளியில் செல்வதை தவிர்க்குமாறும் அவ்வபோது எச்சரிக்கையும் விடப்பட்டு வருகிறது. காற்று மாசுவை ஆண்டுக்கு 15 சதவீதம் வரை குறைப்பதற்காக சீன அரசு 28 நகரங்களை கண்டறிந்தது. இதில், கடந்த அக்டோபர் மாதம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெறும் நான்கு நகரங்களே அடைந்துள்ளன. தலைநகர் பீய்ஜிங், பவ்டிங், ஷிஜியாஷுவாங், அன்யாங்  ஆகிய நகரங்கள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன