சீனாவில் கனமழையால் ஊருக்குள் புகுந்த வெள்ளம்

சீனாவில் பெருக்கெடுத்த வெள்ளம் ஊருக்குள் புகுந்து, வாகனங்கள் அடித்துசெல்லப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. குவாங்ஜி ஜூவாங் ((Guangxi Zhuang)) பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக, நான்பன், ராங் ((Nanpan, Rong)) ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரைபுரளும் வெள்ளம் கரையோர நகரங்களில் நுழைந்ததால், சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்துள்ளது. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

இதேபோல, ஜியாங்ஜி மாகாணத்திலும் பலத்த மழை கொட்டி வருகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ஜின்கான் ((Jing’an)) என்ற இடத்தில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில், ஆற்றின் அக்கரையில் இருந்தவர்களை மறுகரையில் இருந்த தீயணைப்புத்துறையினர் பத்திரமாக மீட்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன